Friday, 22 July 2011

TAMIL NADU VEHICLE REGISTRATION NUMBERS


VEHICLE REGISTRATION  NUMBERS



TN-01 : CHENNAI CENTRAL(CHETPET)
TN-02 : CHENNAI NORTH WEST(THIRUMANGALAM,MUGAPPAIR EAST & WEST)
TN-03 : CHENNAI EAST (THONDIYARPET)
TN-04 : CHENNAI EAST (BASIN BRIDGE)
TN-05 : CHENNAI NORTH
TN-06 : CHENNAI SOUTH (TRIPLICANE)
TN-07 : CHENNAI SOUTH (THIRUVANMIYUR ,except anna salai)
TN-09 : CHENNAI WEST(KK NAGAR)
TN-10 : CHENNAI SOUTH WEST (VALASARAWAKKAM)
TN-20 : TIRUVALLUR
TN-21 : KANCHIPURAM
TN-22 : MENAMBAKAM
TN-23 : VELLORE
TN-24 : KRISHNAGIRI
TN-25 : THIRUVANAMALAI
TN-28 : NAMAKKAL
TN-29 : DHARMAPURI
TN-30 : SALAM TOWN
TN-54 : SALAM EAST
TN-52 : SANGAGIRI
TN-31 : CUDDALORE
TN-32 : VILUPURAM
TN-33 : ERODE
TN-34 : THIRUCHENGODE
TN-36 : GOPICHETTIPALAYAM
TN-56 : PERUNDURAI
TN-37 : COIMBATORE SOUTH
TN-38 : COIMBATURE NORTH
TN-61 : COIMBATURE CENTRAL
TN-39 : TIRUPPUR NORTH
TN-40 : METTUPALAYAM
TN-41 : POLLACHI
TN-42 : TIRUPPUR SOUTH
TN-43 : UTHAGAMANDALAM THE NILAGIRIS
TN-45 : TRICHY
TN-46 : PERABALURE
TN-47 : KARUR
TN-48 : SRI RANGAM
TN-49 : THANJAVUR
TN-50 : TIRUVARUR
TN-51 : NAGAPATTINAM
TN-55 : PUDUKOTTAI
TN-57 : DINDIGUL
TN-58 : MADURAI SOUTH
TN-59 : MADURAI NORTH
TN-60 : PERIYAKULAM/THENI
TN-63 : SIVAGANGAI
TN-65 : RAMANATHAPURAM
TN-67 : VIRUTHUNAGAR
TN-69 : TUTICORIN
TN-72 : TIRUNELVELI
TN-74 : NAGARCOVIL
TN-75 : MANRTHANDAM
TN-76 : TENKASI

PY-01 : PUDUCHERRY
PY-02 : KARAIKAL
PY-03 : MAHE
PY-04 : YANAM

நலமுடன் வாழ...


நலமுடன் வாழ... நடந்தால் போதும்!

இரத்த அழுத்தம், நீரிழிவு, இதயக் கோளாறு, கை, கால் முட்டி பிரச்சனைகள், மன அழுத்தம் ஆகியவற்றை நெருங்கவிடாமல் தடுப்பதற்கு நடையே சிறந்த பயிற்சி என்று அமெரிக்காவின் ஆய்வில் உறுதியாகியுள்ளது!

உடம்பு, சதை கூடுதல், கொழுப்பு அதிகரிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான மருத்துவத்தில் நிபுணரான விஞ்ஞானி ஜேம்ஸ் லீவைன், "உடல் நலத்தைக் காக்க நடந்தால் போதும், பயிற்சி சாலைகளுக்குச் செல்லத் தேவையில்லை. உங்களுடைய நாடித் துடிப்பை சோதிக்கத் தேவையில்லை. தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிட்டு, சோபாவில் இருந்து எழுந்து சற்று நேரம் நடந்துவிட்டு வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்" என்று கூறியுள்ளார்.

ஜப்பானில் மாக்சு மாட்டோ நகரில் உள்ள ஷின்ஷு பல்கலையின் மருத்துவ மாணவர்கள் நடத்திய ஆய்வில் இது உறுதியாகியுள்ளது என்று கூறியுள்ள மருத்துவர் லீவைன், வயதானவர்கள் வேகமாக நடப்பதால் உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து தங்களை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

246
பேரை 5 மாதங்கள் தொடர்ந்து ஆய்வு செய்தபோது அதில் கண்டறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் லீவைன் இதனைக் கூறியுள்ளார். இந்த 246 பேரில் நடப்பவர்கள், வேகமாக நடப்பவர்கள், நடக்காதவர்கள் எல்லோருமே அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

வேகமாக நடந்து பயிற்சி செய்பவர்களின் உடல் நலம் நன்கு முன்னேற்றம் அடைவதாகக் கூறியுள்ள வாஷிங்டனைச் சேர்ந்த மருத்துவர் லீவைன், நடத்தலே எல்லா வயதினருக்கும் உகந்த மதிப்பு வாய்ந்த பயிற்சி என்று கூறியுள்ளார். (ஏ.என்.ஐ.)


கர்ப்பிணிப் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் அவர்களின் பூரணத்துவத்தை அடைவது என்றால் மிகையில்லை. பொதுவாக திருமணம் முடியும் வரை பெண்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடும், வாழ்க்கை பற்றிய கனவுகளோடும் இருந்தாலும் திருமணத்திற்குப் பின் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதே அவர்களின் மறுபிறவி என்கிறோம்.

ஆகவே தான் தாய்மையை, மனித இனத்தின் ஆதாரமான குழந்தைகளை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கும் அன்னையரை அனைவரும் போற்றிப் புகழ்கிறோம். குழந்தையை வயிற்றில் கருவாக சுமந்த முதல் மாதத்தில் இருந்து புதிய உயிரை பெற்றெடுப்பது வரை எவ்வித சிக்கலும் இன்றி கர்ப்பிணிப் பெண்கள் சிறப்பான உணவு முறைகளையும், எளியவகையிலான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் மருத்துவர்களின் ஆலோசனைகளையும் தவறாமல் உரிய முறையில் கடைபிடித்தல் அவசியம்.


கர்ப்பிணிப் பெண்களுக்கான சில குறிப்பிடத்தக்க டிப்ஸ் இதோ.......

கர்ப்பம் என்பதை மருத்துவரிடம் உறுதிப்படுத்திய பின்னர், ஒவ்வொரு மாதமும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

அன்றாடம் குறைந்த அளவு உணவுகளை சிலமணி நேர இடைவெளி விட்டு அடிக்கடி சாப்பிடவும். 4 மணி நேரத்திற்கு அதிகமான இடைவெளி இருத்தல் கூடாது.

ஒவ்வொரு முறை படுக்கையிலிருந்து எழும்போதும் கவனமாக பொறுமையுடன் எழுந்திருத்தல் வேண்டும்.

தூங்கும்போதும் கூட உங்களுடன் பிஸ்கட் பாக்கெட்களை வைத்திருக்கவும். தூங்கி எழுந்தவுடன் சாப்பிடுவதற்கு ஏதுவாகும்.

ஒரே நேரத்தில் அதிக அளவிலான சாப்பாட்டை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.

நீங்கள் ஓய்வு வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் போதிய அளவு ஓய்வை எடுத்துக் கொள்ளுங்கள்.

சாப்பிடும் உணவை நுகர்ந்தபின் சாப்பிடுவதை தவிர்க்கவும். அது உங்களுக்கு உணவின் மீது அதிருப்தியை ஏற்படுத்தலாம்.

தேவைப்பட்டால் எலுமிச்சம் பழம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு நுகர்ந்து கொள்ளவும். இது வாந்தியைத் தவிர்க்க ஏதுவாகும்.

இடுப்பை இறுக்காதவகையிலான தொழதொழப்பான (லூஸ்) ஆடைகளை அணிந்து கொள்ளப்பழகுங்கள்.

தேவைப்பட்டால் முழங்கால்களுக்கு இடையே தலையணை ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் உங்களின் இடுப்பு மற்றும் முழங்கால்களில் ஏற்படும் அழற்சி சற்றே மட்டுப்படும்.


மாலைக்குப் பின்னர் திரவ உணவு வகைகளை அதிகமாக எடுப்பதைத் தவிர்க்கவும். பகலில் அல்ல. அதேபோல் இரவில் காபி அருந்துவதையும் தவிர்த்தல் நலம்.

பால் அல்லது மூலிகை கலந்த தேநீர் அருந்தவும்.

முடிந்தால் சாப்பிட்டபின் சூயிங்கம் அல்லது மிட்டாய் போன்றவற்றை சிறிதுநேரம் மெல்லுங்கள்.

பயணத்தின் போது நீண்டநேரம் உட்கார்ந்திருப்பதைத் தவிருங்கள். குறைந்தது ஒருமணி நேரத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஓருமுறையோ நடந்து உலவுங்கள். பெரும்பாலும் பயணத்தின் போது அவ்வப்போது கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

சற்றே எண்ணெய் குறைவான ஸ்நாக்ஸ் வகைகளை பயணத்தின் போது எடுத்துச் செல்லுங்கள். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை கேரட், ஆப்பிள் அல்லது சாண்ட்விச் போன்றவற்றில் ஏதாவதொன்றை சாப்பிடவும்.

அடிக்கடி தண்ணீர் அருந்துங்கள். உடலில் உள்ள தண்ணீர் வெயில், உடல் உஷ்ணம் காரணமாக அவ்வப்போது நீர்த்துப் போகும் என்பதால் தேவையான அளவு தண்ணீரை குடிப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.

கர்ப்பமாக இருக்கும் போது முதுகுவலி ஏற்பட்டால், உடனடியாக வெந்நீர் பேக் கொண்டு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுங்கள். உங்களின் முதுகுத்தண்டானது சுவரில் ஒட்டியிருக்கும்படி நின்றுகொண்டு சிறிதுநேரத்திற்கு அதே நிலையிலேயே இருங்கள். இதனால் முதுகுவலி நீங்கலாம்.
படுத்திருக்கும் போது உங்களின் கால்கள் உயர்வாக இருக்குமாறு தலையணைகளை வைத்துக் கொண்டு தூங்கலாம்.

நிறைமாதத்தில் குழந்தைபிறப்பதற்கான வலி ஏற்படும் போது, முடிந்தால் சற்றே நடக்கலாம். இதன்மூலம் குழந்தை பிறப்பது சற்றே எளிதாகும்.

கர்ப்ப வலி இருக்கும் போது சாப்பிடுதல் அல்லது திரவங்களைக் குடிப்பதால் குழந்தை பிறப்பது விரைந்து பலனைத் தரும்.

இதுபோன்ற தகவல்கள் என்பது பொதுவானவையே. இவற்றையெல்லாம் விட உரிய மருத்துவர்கள் மற்றும் வீட்டில் உள்ள தாதியர் அல்லது அனுபவம் மிக்கவர்களின் அறிவுரைப்படி செயல்படுங்கள்.

வளமான குழந்தையைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.


உடல் பருமனைக் குறைக்க உணவுமுறைகள்

உடல் கூடுவதற்கான முக்கிய காரணமே நம் உணவு பழக்க வழக்கங்கள் தான். உணவுக்கேற்ற வேலையோ வேலைக்கேற்ற உணவு நம்மில் பலருக்கு கிடையாது. உடல் எடையை உடனே குறைப்பது என்பது இயலாத காரியம். பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக முழுவதுமாக சாப்பாட்டை நிறுத்தி விடுகிறார்கள். இது தவறு. உணவு கட்டுப்பாடு தான் தேவையே யொழிய முழுவதுமாக உணவை தவிர்க்க கூடாது.

உடல் எடை குறைய

ஒருவரது உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அவரது மூளை பதிவு செய்து வைத்து செயலாற்றும் திடீரென 10 நாட்கள் சாப்பிடாமல் இருந்து எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணினால் அதற்கு மூளை இடம் கொடுக்காது.

தினமும் காலை 20 முதல் 30 நிமிடங்கள் வரை நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இது தொப்பையை குறைத்து விடும். அதற்கடுத்து முதுகுப் புறம், இடுப்புப்பகுதி, வயிற்றுப்பகுதி என இவைகளுக்கென்று தனியாக உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றை எளிதாக செய்யலாம். இவ்வாறு உடற்பயிற்சி தொடர்ச்சியாக மேற்கொண்டால் மூன்று மாதங்களில் எடையை குறைக்கலாம். அதற்கு மாத்திரை, மருந்துகள் எதுவுமே கிடையாது. வெறும் உடற்பயிற்சி மட்டும் தான்.

உணவு கட்டுப்பாடு!

இந்த உடற்பயிற்சிகளோடு க்ஷயடயnஉந னநைவ தேவை. அதாவது நொறுக்குதீனியை விட்டு விட வேண்டும். இவைகள் பெரும்பாலும் எண்ணெயில் பொறிக்கப்பட்டவையாக தான் இருக்கும். இதை தவிர்த்து வேக வைத்த உணவு, காய்கறி சாதம், ரசம், குழம்பு என இவற்றை ஒரு வேளை சாப்படிடலாம்.

மற்ற உணவை ஒருவேளை என பிரித்துக் கொள்ள வேண்டும். எப்போதுமே நம் வயிறு அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று என நிரம்பி இருக்க வேண்டும். பழைய உணவுகள், குழம்புகள் என எதையுமே சாப்பிடுவதை தவிர்த்திட வேண்டும். சிப்ஸ், பஜ்ஜி, போண்டா, மிக்சர், இனிப்பு வகைகள், காபி உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டியது முக்கியமானது.

சிறந்த உணவு முறைகளை மேற்கொண்டால் உடல் எடை சாதாரணமாக இருக்கும். உணவு முறையின் கட்டுப்பாடு இல்லாததால் தான் உடல் பருமனடைகிறது.

இதைக் கட்டுப்படுத்துவதற்கான சில ஆரோக்கிய உணவு முறைகள்:-

*
காலையில் எழுந்தவுடன் முளைவிட்ட கொண்டைக்கடலை அல்லது கப் சுண்டல்
*
பகலில் மூன்று தக்காளி

இவை இரண்டையும் அன்றாடம் உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகளில் வைட்டமின் "சி" முழுமையாக உடலுக்கு நேரடியாக கிடைக்கிறது. இந்த வைட்டமின் சி எல்லா செல்களுக்கும் ஆக்சிஜனை கொடுக்கிறது.

உடல் நஞ்சுப் பொருட்கள் ஏதாவது இருந்தால் உடனே அழித்து வெளியேற்றி விடும். நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்பதால் இவர்கள் சுமார் 25 கொண்டைக்கடலையை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இதன் மூலம் உடல் பருமன் எளிதில் கட்டுப்படுத்தப்படும்.

தட்டைப் பயிறு

அடுத்து தட்டைப்பயிறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தட்டைப்பயிரில் ஃபோலிக் அமிலம் உள்ளது. இது உடலில் புதிய செல்களை உருவாக்க தேவையான "செரின்" "கிளைகின்" என்ற இரண்டு அமினோ அமிலங்களை உற்பத்தி செய்கிறது. நமக்கு மிகவும் பிடித்தமான உணவு என்றாலும் அதனை குறைவாக சாப்பிட "வெட்டின்" என்ற ஹார்மோனை தட்டைப்பயிறு சுரக்க செய்கிறது.

இதனால் குறைவாக சாப்பிட்டாலும் நிறைய சாப்பிட்ட உணர்வு ஏற்படும். இதன் விளைவு உடலில் அதிக கொழுப்பு சேர்வது தடுக்கப்பட்டு உடல் குண்டாகாமல் இருக்கிறது. தட்டைப்பயிறு சேர்க்காத நாட்களில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் எடை குறையுமோ? உடல் ஆரோக்கியம் தான் குறையுமோ?

மனிதனுக்கு இருந்து வரும் பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளில் தற்போது முக்கிய பங்கு வகிப்பது உடல் பருமன் தான். உடல் பருமனானாலும் பிரச்னை, உடல் இளைத்தாலும் பிரச்னை தான்.

உடற்பயிற்சி, இயற்கை உணவு குறைபாடு

உடற்பயிற்சி செய்யாதது தான் இதற்கு முக்கிய காரணம். மாரடைப்பு, இரைப்பை குடல்நோய், புற்றுநோய், பக்கவாதம், சுவாச கோளாறுகள், சிறுநீரக செயலிழப்பு முதலியவை அளவுக்கு அதிகமான உடல் பருமனால் ஏற்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

இயற்கை உணவுகளை குறைத்து பல்வேறு வகையில் துரித உணவுகளுக்கு மக்கள் மாறியதே இதற்கு காரணம் குளிர்பானங்களை குறைக்க வேண்டும். தைராய்டு சுரப்பு குறைவாக இருந்ததனால் உடல் பருமன் அதிகமாகவும், தைராய்டு அதிகமாக இருந்தால் ஒல்லியாகவும் இருப்பார்கள்.

தேவை உடனடி தீர்வு?

எதிலும் வேகம் என்னும் இக்காலத்தில் உடல் பருமனுக்கான தீர்வும் உடனடியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். டாக்டரிடம் சென்று உடனே எடையை கூட்ட வேண்டும்.. குறைக்க வேண்டும் என்ன செய்வது? என்று தான் கேட்கிறார்கள். டாக்டர்கள் அதற்கான ஆலோசனைகளை கூறி படிப்படியான முன்னேற்றத்தை பெறலாம் என்று அதற்கான வாழ்க்கை முறையை விளக்குகிறார்கள். ஆனால் உடனுக்குடன் தீர்வு வேண்டும் என்று எண்ணும் இவர்கள் வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்று தேடுகிறார்கள்.

தனியார் உடல் குறைப்பு மையங்கள்

இவர்களின் தேடலை நிறைவேற்றும் விதமாக புற்றீசல் போலப் பெருகி வரும் பல தனியார் மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

"
உடல் எடையைகுறைக்கவோ, அதிகரிக்கவோ வேண்டுமா?‘ உடனே எங்களை அணுகவும். எந்த வித உணவு கட்டுப்பாடோ பத்தியமோ கிடையாது. பக்க விளைவுகளும் வராது! ஒரே மாதத்தில் தீர்வு காணலாம்"

இந்த விளம்பரங்கள் நம் கண்ணில் படும் இடங்களில் எல்லாம் தற்போது பரவலாக தென்படுகிறது. ஒரு மாதத்தில் எப்படி முடியும் என்று யாரும் யோசிப்பது கிடையாது. அவர்களுக்கு தேவை அப்போதைய தீர்வு மட்டுமே. இந்த தனியார் சிகிச்சை மையங்களில் பல, எந்த வித அனுமதியும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. ஒரு சில சிகிச்சை மையங்களில் மட்டுமே பக்க விளைவுகள் வராதளவிற்கு இந்திய மருத்துவ முறைகளின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இவை போதாதென்று, மேற்கிந்திய நாடுகளில் உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை முறை பிரபலமாக நடந்து வருவது மெல்ல இந்தியாவையும் தொற்ற ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வளர்ச்சி அறிக்கை தரும் புள்ளி விவரம்

இந்தியாவில் கொழுப்பு, உப்பு, சர்க்கரை பயன்பாடு அதிகரித்து வருவதாக 1993-ம் ஆண்டே உலக வளர்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது. நெய் பயன்பாடு மிகவும் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதில் யோசிக்க வேண்டிய விஷயம் இந்தியாவில் கிடைக்க கூடிய கொழுப்புகளில் 40விகிதத்தை 5மக்களே சாப்பிட்டு விடுவதாக  தெரிவித்துள்ளது தான்.

இதற்கு என்ன தான் தீர்வு? உடல் எடையை குறைக்க கூட முடியுமா? மருத்துவர்கள் இந்த மாதிரியான உடனடித் தீர்வு தரும் முறைகளைப் பற்றி என்ன கூறுகின்றனர்?... இந்த கட்டுரையின் நிறைவுப் பகுதியில் காண்போம்.

முதுகுவலி

முதுகுவலி வந்தவர்கள், அதற்கு அடிக்கடி இலக்காகிறவர்கள், சில எளிய சுய அணுகு முறைகளால் முதலுதவி பெறலாம். அவை வருமாறு :

1.
பெரிய பிரச்னைக்கு ஆளாகிவிட்டோம் என்று பதறிவிடாமல் மனசை ஓய்வு நிலைக்குக் கொண்டு வாருங்கள். இதைக் குணப்படுத்த முடியும் என்ற பாஸிடிவ் மனோநிலை பெறுங்கள்.


2.
பின்வரும் உடற் செயல்களைக் கடைப்பிடியுங்கள்.

(
அ) நேராக நிமிர்ந்து நில்லுங்கள்.

(
ஆ) தரையைப் பார்க்காதவாறு தலை நேர்கோணத்தில் நிற்க வேண்டும்.

(
இ) வயிற்றை உள்ளுக்கு தசைகள் மூலம் இழுங்கள். சிறிது நேரம் வயிறு உள்ளடங்கியே இருக்கட்டும்.

(
ஈ) இரு தொடைகளும் காலுக்கு மேல் ஒன்றை ஒன்று சந்திப்பது போல் இணைத்து வையுங்கள்.

(
உ) முதுகின் கீழ்ப்பகுதி அசைந்தோ, சாய்ந்தோ ஆடாத நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். வலி அதிகரித்து நீங்கள் எழுந்து நிற்கிற நேரங்களில் எல்லாம் இந்த உடற் தோற்றத்தைக் கடைப்பிடியுங்கள்.

3.
கடுமையான தாக்குதல் வந்தால் முழுமையாக 3-4 நாட்களுக்கு படுக்கை நேராக அசைவு இன்றி மல்லாந்த நிலையில் படுத்திருங்கள். இதுவே வலியைக் குறைக்கும்.

4.
வெந்நீர் ஒத்தடம் அல்லது ஐஸ் ஒத்தடம் கொடுங்கள்.


5.
உட்காரும் போது. . .

(
அ) நேரான முதுகுப் பக்கம் உள்ள நாற்காலி அதுவும் பாதியளவு மட்டுமே சாய்ந்து கொள்ள அமைப்புக் கொண்ட நாற்காலியே சிறந்தது.


(
ஆ) இடுப்பைவிட லேசாக உயர்ந்த நிலையில் உங்கள் முழங்கால் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் காலுக்கு சிறிய ஸ்டூல் ஒன்று வைத்துக் கொள்ளுங்கள்.

(
இ) கால்மேல் கால் போடாதீர்கள். நாற்காலியில் சரிந்து உட்காராதீர்கள்.

(
ஈ) உங்கள் வேலை ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து செய்ய வேண்டிய வகைப்பட்டது எனில், இடையிடையே அடிக்கடி எழுந்து நில்லுங்கள். அல்லது சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.

6. நிற்கும்போது. . .


(
அ) இரண்டு கால்களிலும் உங்கள் உடல் எடை சமமாக அமரும்படி நில்லுங்கள்.

(
ஆ) நெடுநேரம் நிற்க வேண்டி இருப்பின் சற்று சுற்றிச் சுற்றி நடந்து செல்லுங்கள். உங்கள் உடல் எடையை ஒரு கால் விட்டு ஒருகால் என்று மாற்றி மாற்றி தாங்க வையுங்கள்.

(
இ) நெடுநேரம் நிற்கும்போது முதுகில் ஏற்படும் டென்ஷனைக் குறைக்க ஒரு ஸ்டூல் அல்லது படி மீது ஒரு கால் மாற்றி ஒரு கால் உயர வையுங்கள்.

7. தூங்கும்போது. . .

(
அ) மென்மையான, புதையும் தன்மை கொண்ட மெத்தையில் படுக்காதீர்கள். கடினமான ஒரு படுக்கை அல்லது கடினமான பலகை உள்ள கட்டிலின் மேல் விரிப்பு விரித்துப் படுங்கள்.

(
ஆ) உங்கள் படுக்கை முதுகிற்கு நல்ல சார்பு தருவதாகவும், முதுகெலும்பை நேர்நிலையில் வைக்க உதவுவதாகவும் அமையவேண்டும்.

(
இ) ஒந்திரித்துப் படுக்கும்போது முழங்கால்கள் நேர்கோணத்தில் அமையும்படி விழிப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.

(
ஈ) ஒருபோதும் வயிற்றின் மேல் படுக்காதீர்கள். கவிழ்ந்தடித்துப்படுப்பது சரியல்ல.

8.
பொருள்களைத் தூக்கும்போதோ உயர்த்தி எடுக்கும்போதோ. . .

(
அ) முழங்காலை வளையுங்கள். முதுகை அல்ல.

(
ஆ) பயணத்துக்குச் சுலபம் என்று ஒரே சூட்கேஸில் அடைக்காதீர்கள். இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட் கேஸில் கொண்டு செல்லுங்கள். இரண்டையும் இருகரங்களால் தூக்கும்போது சம எடைப் பங்கீடு வரும். முதுகுத் தசைகளுக்கும் சம வேலை கிட்டும்.

(
இ) முதுகுத் தசைகளை அதிக உபத்திரவம் செய்யாத வகையில் பொருள்களை உயர்த்தி வைக்கும்போது ஏணியில் படிப்படியாக வைத்து ஏற்றுங்கள்.

9. கார் ஓட்டும்போது. . .

(
அ) உங்கள் கீழ் முதுகுக்கு சார்ந்து கொள்ள ஒரு குஷன் உபயோகியுங்கள். இடைவெளி விட்டு விட்டு காரை நிறுத்தி இறங்கி நின்று பின்பு தொடருங்கள்.

10.
ஹீல் வைத்த காலணிகளை அணியாதீர்கள். தட்டையாக உள்ள காலணியையே அணியுங்கள்.

11.
உங்கள் எடை அதிகமாக இருந்தால் குறைத்துவிடுங்கள்.

12.
டைவ் அடித்தல், பல்டி அடித்தல் போன்ற செயல்கள் கூடாது.

13.
கண்ட கண்ட மாத்திரை மருந்துகளை வாங்கி நீங்களே சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள்.

உடற்பயிற்சி

தசை இயங்கு நிலைக்கு தேகப்பயிற்சி அவசியம். முதுகெலும்பை நல்ல நிலைக்கு வைக்கவும் உடற்பயிற்சி உதவும்.

உங்கள் மருத்துவரின் அனுமதி பெற்று உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். வேகமாக நடத்தல், நீச்சல், கைகால்களை மென்மையாக நீட்டி மடக்கல் நல்ல பயிற்சிகளாகும்.

எந்தப் பயிற்சியையும் நிதானமாகவும் படிப்படியாகவும் செய்யவேண்டும்.

திக்குவாயிலிருந்து மீளுதல் - சில யோசனைகள்

உலகில் இன்று மொத்தம் 45 மில்லியன் மக்கள் திக்குவாய் குறையுடன் இருக்கிறார்கள். இதில் இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் இருக்கிறார்கள். இது குறிப்பாக ஆண்களுக்கே அதிகம் வருகிறது. திக்குவாய் உள்ளவர்களில் 80 சதவீதத்தினர் ஆண்களே. இதில் 65 சதவீதத்தினருக்கு பரம்பரை மூலம் எற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெர்விக்கின்றன. எது எப்படி இருப்பினும் 5 வயதுக்கு முன்னரே திக்குவாய் தொடங்கி விடுகிறது. இதற்கு சிகிச்சை அளிக்காதபோது 10 அல்லது 18 வயதில் இது உச்ச நிலையை அடைகிறது. இது பிற்பாடு நிலையாக இருந்துவிடலாம் அல்லது மறைந்து விடலாம்.

திக்கிப் பேசுபவர்களுக்கு தான் என்ன பேச வேண்டும் என்று நன்றாக தெரியும். ஆனால் ஒரு சில கணத்திற்கு அவர்களால் வெளிப்படுத்த முடியாததற்கு காரணம் அறியாமல் திரும்பத் திரும்பக் கூறியதையே கூறுவது, நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது, பேச்சொலியில் நிறுத்தம் ஏற்படுதல். திக்குவாய் பொதுவாக நரம்பியல் நேரம் தவறுதலால் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது பேசும்போது திக்குபவர்கள் எப்போது தான் நினைத்ததை கூறுவது என்பதில் நரம்பியல் நேரம் தவறுகையால் குழப்பமடைகிறார்கள். பேச்சு என்பது வெறும் நாக்கின் சுழற்சி மட்டுமே அல்ல பேசும்போது மனம், உடல் மற்றும் மூளை ஒருங்கிணைப்பு இருப்பது அவசியம்.

அனைத்து உடல் செயற்பாடுகள் போலவே பேச்சும் நரம்பு-தசை ஒருங்கிணைப்பால் நிகழ்வதே. மூளையின் மின் ரசாயன செய்திகளை குறிப்பிட்ட தசை குழுவிற்கு அனுப்புவதில் நரம்பு-தசை ஒருங்கிணைப்பு ஈடுபட்டுள்ளது. சில சமயங்களில் உணர்ச்சி நிலைகளில் கட்டுபாடுகளை ஏற்படுத்த முடியாத சூழ் நிலையில் நரம்பு-தசை அமைப்பு செயல் தடைபடுகிறது. இது சாதாரண பேச்சு உள்ளவர்களை விட திக்கு வாய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தடைபடுகிறது. தனக்கு அச்சமூட்டுவதாக அவர் நினைக்கும் சூழலில் திக்குவாய் உள்ளவர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் மன தடையால் நரம்புகள் ஒத்துழைக்காமல் சுருங்குவதால் பேச்சுத் தடை ஏற்படுகிறது.

உணர்ச்சி நிலையில் ரிலாக்ஸாக இருக்கும்போது திக்குவாய் உள்ளவர்களும் சரளமாக பேசுவதை நாம் பார்க்க முடியும். மன அழுத்த சூழ்நிலையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. பள்ளியில் அட்டன்டன்ஸ் எடுக்கும்போது, தொலை பேசியில் பேசும்போது, சிலரிடம் அதிகாரமாக பேசும்போது, குழுவில் பேசும்போது, வேலை நேர்முகத் தேர்வின் போது, என்று இவர்களுக்கு நெருக்கடி நிலைகள் அதிகம்.

எனினும் திக்குவாய் குறித்த இன்னொரு அதிசயம் என்னவெனில் இவர்கள் தடையின்றி பாடுவதைக் கூட சில சமயங்களில் நாம் பார்க்கலாம். ஏனெனில் அடுத்தவார்த்தை என்னவென்று முன் கூட்டியே தெரிந்து விடுவதால், நரம்பியல் நேரம் தவறுகை பேச்சில் நிகழ்வது போல் இவர்களுக்கு பாட்டில் ஏற்படுவதில்லை. உரையாடலின் போது இது போன்ற நன்மை இல்லையாதலால் அடுத்த வார்த்தையை யோசிக்கும் தருணத்தில் பேச்சு தடுமாற்றம் ஏற்படுகிறது, இது திரும்ப திரும்ப நடக்கும்போது பயம் தோன்றி மேலும் திக்குதலை அதிகமாக்குகிறது. மற்றபடி அவர்கள் மற்ற மனிதர்களை போல்தான். சிலர் அதி புத்திசாலிகளாகவும் இருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

சில மன நோய் நிபுணர்கள் தூக்க மாத்திரைகளை கொடுத்து மன அழுத்தத்தை குறைத்தால் பேச்சு சரளமாக வரும் என்று அத்தகைய மாத்திரைகளை தருகின்றனர். ஆனால் இது பிரச்சனிகளை மேலும் சிக்கலாக்குவதாக பேச்சு பயிற்சி சிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். திக்குவாய்க்கு ஹிப்னாடிஸ சிகிச்சையும் பெரிய பலன்களை ஏற்படுத்தவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஹிப்னாடிச மயக்கத்தில் சரளமாக பேசும் திக்கு வாய்காரர்கள் மயக்க நிலையில் இருந்து மீண்டதும் திக்கி பேச துவங்கிவிடுகின்றனர். யோகா மற்றும் தியானம் ஆகியவைகளில் உணர்வு மற்றும் புத்திசார்ந்த நிலைகளில் மேலதிக சம நிலை ஏற்படுவதால் திக்குவாய்க்கு இந்த பயிற்சிகளே சிறந்தது. பேச்சு எப்படி இயல்பானதோ திக்குவதும் இயல்பானதே இது பெரிய நோய் என்றெல்லாம் கூறமுடியாது, எனவே சில பல வாழ் முறை நடைமுறை அளவுகோல்களிலேயே இதை தீர்க்க முடியும்.

திக்குவாய் உள்ளவர்களிடம் பேசும்போது நாம் எந்த வித அணுகுமுறையைக் கொள்ளவேண்டும் என்பது கீழ்வருமாறு :

என்ன கூறுகிறார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் எப்படி கூறுகிறார் என்பது முக்கியமல்ல.

பொறுமையாக கேட்கவேண்டும், அவர்களை அவசரப்படுத்துவது கூடாது.

பேசும்போது இயல்பாக அவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்க்கவேண்டும்.

இவர்களுக்கு பேச்சில் தடையே தவிர சொல்ல வரும் விஷயத்தில் தடை எதுவும் கிடையாது. எனவே அவர்கள் குழப்பமுள்ளவர்கள் என்று கருதுவதை தவிர்க்கவேண்டும்.

தொலைபேசியில் இவர்கள் பேசும்போது நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால் ஃபோன் லைனை துண்டித்து விடவேண்டாம்.

திக்குவாய் உள்ளவர்கள் தங்களை கேட்பவரிடமிருந்து தங்கள் திக்குவாய் கோளாரை மறைக்க விரும்புவது வழக்கம். ஆனால் இதனால் மேலும் பேச்சு தடைகள் அதிகரிக்கவே செய்யும்.

இறுதியாக கூறவேண்டுமானால் திக்குவாய் உள்ளவர்கள் பேச்சு பயிற்சியில் தொடர்ந்து நம்பிக்கையுடன் ஈடுபட்டால் சரளப் பேச்சு கைகூடிவிடும். பொறுமையாகவும் விஞ்ஞான முறைப்படியும் தொழில்பூர்வமானவர்களின் வழிகாட்டுதலில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நிச்சயம் இதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வரமுடியும்.

கண் சொட்டு மருந்துகளையும், ஆயின்ட்மெண்ட்களையும் பயன்படுத்துவது எப்படி?

கண் சொட்டு மருந்து பாட்டிலின் லேபிள் அல்லது ஆயின்ட்மெண்ட் உறையிலேயே அவற்றைப் பயன்படுத்தும் விதம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கும். மருத்துவர்கள் பரிந்துரை செய்த முறைகளில் இவற்றைத் துல்லியமாகப் பயன்படுத்த வேண்டும்.

கண்களில் போடப்படும் மருந்துகள், சிறிது நேரத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும். இருப்பினும் மருந்துகளால் கண்கள் சிவந்து இமைகளில் வீக்கம் ஏற்படுமானால், உடனடியாக கண் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

ஒவ்வொரு முறை மருத்துவமனைக்கு செல்லும்போதும் மருத்துவர் பரிந்துரை செய்த மருந்துகளை எடுத்து வருவது நல்லது. ஏனெனில் அப்போதுதான் அதே மருந்தை தொடரலாமா? அல்லது வேறு மருந்துகளை மாற்றலாமா? என்று மருத்துவருக்குக் தெரிய வரும்.

கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்தும் போது ஒன்று அல்லது 2 சொட்டுகளை கண்களுக்குள் செல்லுமாறு விடவேண்டும்.

கண்களை சுத்தம் செய்யும் முறை :

1.
முதலில் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவும்.

2.
கண்களைத் துடைக்க பஞ்சை பயன்படுத்தவும்.

3.
கண் சுத்தம் செய்யும் திரவத்தை பஞ்சின் மேல் ஊற்றவும்.

4.
மூக்கிற்கு அருகில் உள்ள கண் முனையை உட்புறமாக துடைத்து காது பகுதியில் உள்ள முனை வரை வெளிப்புறமாகத் துடைக்கவும்.

5.
ஒருமுறை உபயோகப்படுத்திய பஞ்சினை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.


சொட்டு மருந்துகள் மற்றும் ஆயின்ட்மெண்ட்டுகள் :

1.
முதலில் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவும்.

2.
கண்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

3.
சொட்டு மருந்து சீசாவை நன்றாக குலுக்கவும்.

4.
சீசாவை குலுக்கும்போது தலைகீழாக இருக்கும்படி பார்த்து குலுக்கவும்.

5.
கண்களின் கீழ் இமைப் பகுதியை லேசாகத் திறந்து, டிராப்பர் கொடுத்திருந்தால் அதன் கீழ் முனையை பிடித்துக்கொண்டு போடவும். டிராப்பரை நீரில் போட்டு அலசுவது கூடாது.

6.
மருந்து போடும்போது கண்ணிலோ, இமையிலோ டிராப்பர் படாமல் இருக்க வேண்டும்.

7.
மருந்து போட்டவுடன் கண்களை மெதுவாக மூடவும். உட்புற மூலையில் விரல்களால் சிறிது நேரத்திற்கு லேசாக அழுத்தவும்.

8.
நிறம் மாறிவிட்ட கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.

9.
ஒரே சமயத்தில் பல சொட்டு மருந்துகளை கண்களில் விடும் நிலை ஏற்பட்டால், ஒரு சொட்டு மருந்திற்கும், இன்னொரு சொட்டு மருந்திற்கும் குறைந்தது 5 நிமிட இடைவெளி தேவை.

10.
அதேபோல் ஆயின்ட்மெண்ட் டியூபை பிதுக்கும் முன் அதனை சிறிது நேரம் கைகளிலேயே வைத்திருந்தால் கைச்சூடு டியூபில் ஏறும். இது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கண் சொட்டு மருந்துகளையோ, ஆயின்ட்மெண்ட்களையோ கண்களில் போட்ட பிறகு கண்களை மூடிய நிலையிலேயே விழிகளை அனைத்துப் பக்கமும் உருட்ட வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட ஆயின்ட்மெண்ட்களை கண்களில் போட வேண்டுமெனில், 10 நிமிட இடைவேளி தேவை.

மருந்துகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரிக்குமாறு குறிப்பிட்டிருந்தால் குளிர்பதனப்பெட்டியில் (ரெப்ரிஜிரேட்டர்) வைத்துப் பயன்படுத்தவும். எல்லாவற்றிற்கும் மேலாக தேதி முடிந்த மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.


ஈறுகளையு‌ம் ச‌ரியாக கவ‌னியு‌ங்க‌ள்

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் பல ‌பிர‌‌ச்‌சினைகளு‌க்கு வா‌யி‌ல் அ‌றிகு‌றி‌த் தெ‌ரியு‌ம். அதுபோ‌ல் வா‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளா‌ல் வா‌யி‌ற்‌றி‌ல் உ‌ள்ள உட‌ல் உறு‌ப்பு‌க‌ள் பா‌தி‌க்க‌ப்படு‌ம்.


gums

40 வயதை‌க் கட‌ந்தவ‌ர்க‌ள் உட‌ல் ப‌ரிசோதனை செ‌ய்வது‌ம், உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்வது‌ம், நடை‌ப்ப‌‌யி‌‌ற்‌சி செ‌ய்வது‌ம் என த‌ங்களது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ன் ‌மீது கவன‌ம் செலு‌த்து‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல், பலரு‌ம் ப‌ற்களையும‌், ஈறுகளையு‌ம் கவ‌னி‌க்க மற‌ந்து‌விடு‌கி‌ன்றன‌ர்.

ப‌‌ல்‌லிலோ அ‌ல்லது ஈறு‌க‌ளிலோ ஏதேனு‌ம் ‌பிர‌ச்‌சினை வ‌ந்த ‌பிறகுதா‌ன் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்‌கிறா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு.
ஒரு க‌ர்‌ப்‌பி‌ணி‌ப் பெ‌ண் முத‌லி‌ல் மரு‌த்துவமனை‌க்கு‌ச் செ‌ன்றது‌ம் அவளது வா‌ய்‌‌க்கு‌த்தா‌ன் ‌‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. அதாவது, அவளது வா‌யி‌ல் ஏதேனு‌ம் தொ‌ற்று உ‌ள்ளதா? சொ‌த்தை‌ப் ப‌ற்க‌ள் உ‌ள்ளனவா? என ப‌ரிசோ‌தி‌த்து அத‌ற்கே‌ற்ற ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. இது ஏ‌ன் எ‌ன்று பலரு‌ம் அ‌றிவத‌ி‌ல்லை. அதாவது, வா‌யி‌ல் இரு‌ந்து ஏதேனு‌ம் ‌கிரு‌மி ‌வ‌யி‌ற்று‌க்கு‌ள் செ‌ன்று கருவை‌ பா‌தி‌க்க‌க் கூடாது எ‌ன்பதுதா‌ன் இத‌ன் அடி‌ப்படையாகு‌ம்.

பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள் பல் பிடுங்குவதற்கு மட்டு‌ம்தா‌ன் பல் மருத்துவம் எனக் கருது‌கி‌ன்றன‌ர். எ‌ந்த ‌பிர‌ச்‌சினையாக இரு‌ந்தாலு‌ம் ப‌ல் மரு‌‌த்துவ‌ரிட‌ம் செ‌ன்றா‌ல் ப‌ல்லை‌ப் ‌பிடு‌ங்‌கி‌விடுவா‌ர் எ‌ன்று ‌நினை‌ப்பா‌ர்க‌ள். உ‌ண்மை‌யி‌ல் பற்கள், ஈறுகளை முறையாகப் பராமரித்து பற்களை கடைசி வரை தக்க வைத்துக் கொள்ள உதவுவதுதான் பல் மருத்துவம் எ‌ன்பதாகும‌்.
ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை குறித்து மக்கள் அதிகம் கவலைப்படுவத‌ற்கு‌க் காரண‌ம் இ‌ந்த நோ‌ய்க‌ள் இதயத்தை பா‌தி‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல்.. ஆனா‌ல் இதே ஒரு ப‌ல்‌லி‌ல் ‌பிர‌ச்‌சினை, ஈறு ‌வீ‌க்க‌ம் போ‌ன்றவை ஏ‌ற்ப‌ட்டா‌ல்.. ப‌ல் தானே ‌பிறகு பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.. அ‌ல்லது தானாகவே ச‌ரியா‌கி‌விடு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பவ‌ர்க‌ள் பல‌ர் உ‌ள்ளன‌ர்.

ஆனா‌ல் இ‌னி அ‌ப்படி ஒரு அல‌ட்‌சிய‌த்தை ‌நீ‌ங்க‌ள் செ‌ய்ய‌க் கூடாது. ஏனெ‌னி‌ல் ஈறு நோய்க்கும் இதய நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக மரு‌த்துவ ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதாவது, ஈறு நோய்க்கும் இதய நோய்க்கு வித்திடும் ரத்த நாளங்களின் குறுகலுக்கும் ("அதீரோஸ்குளோரோசிஸ்') தொடர்பு இருப்பது நிரூபணமாகியுள்ளது.
ஈறு நோய் எ‌ன்பது, பற்களி‌ன் இடு‌க்குக‌ளி‌ல் த‌ங்கு‌ம் ‌சில உணவுப் பொருள்கள், சில வகை பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் ஒரு வகை அசுத்த கொழுப்பு பற்களைச் சுற்றிப் படிகிறது. இதை ஆரம்பகட்ட ஈறு நோய் (ஜின்ஜிவிட்டிஸ்) என்று கூறலாம்.
வழக்கமாக பிங்க் நிறத்தில் இருக்கும் ஈறுகள், சிவப்பு நிறமாகக் காட்சி அளிப்பதும் பல் துலக்கும்போது ரத்தக் கசிவு ஏற்படுவதும் ஈறு நோய்க்கான அறிகுறிகள். இப்படி பற்களில் படியும் கடினமான கொழுப்புப் பொருள்களை பல் துலக்கும் பிரஷ் மூலம் அகற்ற முடியாது.
இந்தக் கொழுப்பு படிப்படியாக இறுகி, மஞ்சள் கலந்த கடின படிமமாக உருமாறும். நாள்கள் செல்லச் செல்ல, இந்தப் படிமம் ஆழமாக இறுகி, தீவிர ஈறு நோயாக மாறி விடும். இதன் மூலம் தாடை எலும்பில் நோய் பரவி பாதிப்பு ஏற்படும். மேலும் இது இதய நோயாகவும் உருவெடுக்கும்.
இதயத்துக்கு ரத்தத்தை அனுப்பும் ரத்த நாளங்கள் கொழுப்புச் சத்தால் அடைக்கப்பட்டு, குறுகிய பாதையாகச் சிதைவடைவதுதான் இதய நோயாக உருவெடுக்கிறது.
இவ்வாறு நாளங்களில் கொழுப்பு படியும்போது ரத்த நாளங்களின் சுவர்களும் பாதிக்கப்பட்டு, ஆக்ஸிஜன் மற்றும் சத்துப் பொருள்கள் பற்றாக்குறையால் இதயம் பாதிக்கப்படும். மாரடைப்பு ஏற்படக்கூடும். இப்படி கடுமையான பாதிப்பை தரக்கூடிய இதய நோய்க்கும் ஈறு நோய்க்கும் தொடர்பு இருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவல் பல ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
ஈறு நோயை உருவாக்கும் பாக்டீரியா, ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். மேலும் எதிர்ப்புத் தன்மையற்ற ஈறுகளிலிருந்து வெளியாகும் பாக்டீரியாக்கள், ரத்தக் குழாயைச் சென்றடைந்து நாளங்களின் சுவர்களை வெப்பப்படுத்துவதால் நாளங்களில் தேவையற்ற சுருக்கம் ஏற்படுகிறது. சில நேரங்களில் கொழுப்புகள் அடங்கிய ரத்த நாளங்களில் பாக்டீரியாக்கள் தங்களை நேரடியாக இணைத்துக் கொள்வதாலும் ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்படுவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
எனவே இதய நோயைத் தவிர்க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று விரும்புவோர் ஈறு நோய்களை உடனடியாக உ‌ரிய மரு‌த்துவ‌‌த்‌தி‌ன் மூல‌ம் ‌தீ‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வேண்டும்.
ப‌ல் போனா‌ல் சொ‌ல்லே‌ப் போ‌ய்‌விடு‌ம். எனவே இ‌னியு‌ம் ப‌ல் தானே எ‌ன்று அல‌ட்‌சியமாக இரு‌க்க மா‌ட்டீ‌ர்களே..

வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பிடு‌ங்க‌ள் சுறுசுறு‌ப்பாக வாழு‌ங்க‌ள்

வாழைப்பழம் - எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழமாகு‌ம். மேலு‌ம், இத‌ற்கு கால‌நிலை எதுவு‌ம் இ‌ல்லாம‌ல் எ‌ல்லா கால‌ங்க‌ளிலு‌‌ம் ‌கிடை‌க்கு‌ம் ஒரு பழ‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலு‌ம் வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷம் இரு‌ப்பதாக‌க் கூறு‌கிறா‌ர்க‌ள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அதாவது ‌தினமு‌ம் ‌மூ‌ன்று வேளை உணவு‌க்கு‌ப் ‌பிறகு ஒரு வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்‌டா‌ல் மூளை சுறுசுறு‌ப்பாக இ‌ய‌ங்கு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் அவ‌ர்க‌ள்.

மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது வாழை‌ப்பழ‌ம். அதாவது, வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ் உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் அ‌திகமாக‌க் கொண்டுள்ளது.

ஒரு ம‌னித‌ன் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை பெறு‌கிறா‌‌ன் எ‌ன்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழை‌ப்பழ‌த்‌தி‌ல் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க்க‌ள் ம‌ட்டு‌ம் ‌நிறை‌ந்‌திரு‌க்க‌வி‌ல்லை, மேலு‌ம், பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு மரு‌ந்தாகவு‌ம் கூட வாழை‌ப்பழ‌ம் உ‌ள்ளது. எனவே ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் ‌‌தினமு‌ம் ஒரு வாழை‌ப்பழ‌த்தையாவது சா‌ப்‌பிடு‌ம் வழ‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். அ‌ந்த கால‌த்‌தி‌ல் அத‌ற்காக‌த்தானோ எ‌ன்னவோ வெ‌ற்‌றிலையுட‌ன் வாழை‌ப்பழ‌த்தை வை‌த்து‌க் கொடு‌க்கு‌ம் முறை கடை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவ‌ர்களு‌க்கு‌த் தெ‌ரியாததா எ‌ன்ன?

முத‌லி‌ல் மல‌‌ச்‌சி‌க்க‌ல் ‌வியா‌தி‌யி‌ல் இரு‌ந்து ம‌னிதனை‌க் கா‌‌ப்பா‌ற்று‌ம் இய‌ற்கை மரு‌ந்து வாழை‌ப்பழ‌ம்தா‌ன். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடி‌த்தா‌ல் சோ‌ம்ப‌ல் போயே‌ப் போ‌ச்சு.

மேலு‌ம், நெ‌ஞ்செ‌ரி‌ப்பு, உட‌ற் பரும‌ன், குட‌ற்பு‌ண், உட‌லி‌ல் வெ‌ப்ப‌நிலையை ‌சீராக வை‌க்கவு‌ம், மன அழு‌த்த‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு வாழை‌ப்பழ‌ம் ந‌ல்ல மரு‌ந்தாக உ‌ள்ளது.

புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் புகை‌ப்‌பிடி‌த்தலை ‌விடு‌‌ம்போது வாழை‌ப்பழ‌ம் அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் எ‌ளி‌தி‌ல் ‌விடுபடலா‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்படு‌கிறது.

உட‌ல் ந‌ல‌த்‌தி‌ற்கு செ‌ரிமான‌ம் அவ‌சிய‌ம்  

செ‌ரிமான‌த்‌தி‌ற்கு‌ம் உட‌ல் நல‌த்‌தி‌ற்கு‌ம் மு‌க்‌கிய‌ப் ப‌ங்கு உ‌ண்டு. செ‌ரிமான‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டா‌ல் வ‌யி‌ற்றுவ‌லி‌யி‌ல் துவ‌ங்‌கி அடு‌த்தடு‌த்து பல ‌வியா‌திக‌ள் ப‌ற்‌றி‌க் கொ‌ள்ளு‌ம்.

மரு‌த்துவ‌ர்க‌ள் கூறு‌ம் ம‌ற்றொரு ‌விஷய‌ம் எ‌ன்னவெ‌ன்றா‌ல், ஒரு ம‌னித‌னி‌ன் வ‌யி‌ற்‌றி‌ல் ஏராளமான ‌கிரு‌மிக‌ள் வா‌ழ்‌ந்து கொ‌ண்டு தா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அத‌ற்கே‌ற்ற ‌தீ‌ணி போடு‌ம்போது அ‌ந்த நோ‌ய் வள‌ர்‌ந்து ந‌ம்மை‌த் தா‌க்கு‌கிறது. எனவே, நா‌ம் உ‌ண்ணு‌ம் உணவு‌ம், அது செ‌ரிமான‌ம் ஆவது‌ம்தா‌ன் நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு அடி‌ப்படையான ‌விஷய‌ங்க‌ள் ஆ‌கி‌ன்றன.

அதனா‌ல்தா‌ன் பெரு‌ம்பாலான ‌வியா‌திக‌ள் வ‌யி‌ற்‌‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் கோளாறுகளா‌ல் வரு‌கி‌ன்றன எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் ‌கு‌றி‌ப்‌பிடு‌கிறா‌ர்கள‌். எனவே ‌செ‌ரிமான‌த்தை‌ப் ப‌‌ற்‌றி மேலோ‌ட்டமாகவாவது தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டியது அவ‌சிய‌ம்.

பொதுவாக நா‌ம் சா‌ப்‌பி‌ட்ட உணவு 3 முத‌ல் 4 ம‌ணி நேர‌த்து‌க்கு‌ள் ‌ஜீரணமா‌கி‌வி‌ட வே‌ண்டு‌ம். நா‌ம் முத‌லி‌ல் சா‌ப்‌பி‌ட்ட உணவு ‌ஜீரணமா‌கி ப‌சி எ‌ன்ற உண‌ர்வு ஏ‌ற்ப‌ட்ட ‌பிறகுதா‌ன் அடு‌த்த உணவை உ‌ண்ண வே‌ண்டு‌ம்.

சா‌ப்‌பி‌ட்ட ‌பி‌ன்பு அ‌திகமாக ‌நீ‌ர் அரு‌ந்துவது ந‌ல்லது. ஆனா‌ல் சா‌ப்‌பிடு‌ம் மு‌ன் ‌நீ‌ர் அரு‌ந்துவது ‌ஜீரண இய‌க்க‌த்தை ‌கெடு‌த்து‌விடு‌ம். நடுநடுவேயு‌ம் ‌நீ‌ர் அரு‌ந்துவது கூடாது. ஆனா‌ல், ப‌சி எடு‌த்த ‌பிறகு, சா‌ப்‌பிட இ‌ன்னு‌ம் ‌சி‌றிது நேரமாகு‌ம் எ‌ன்று தெ‌ரி‌ந்தா‌ல் ‌நீ‌ர் அரு‌ந்துவது வ‌யி‌ற்றை‌க் கா‌ப்பா‌ற்று‌ம் ‌வித‌த்‌தி‌ல் அமையு‌ம்.

ஒ‌வ்வொருவரு‌ம், த‌ங்களது செ‌‌ரிமான‌த் ‌திறனை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டா‌ம். ஒரு ‌சிலரு‌க்கு ‌சில உணவு‌ப் பொரு‌ட்க‌ள் செ‌ரி‌‌க்க நேரமாகு‌ம். அவைகளை உ‌ண்ணு‌ம்போது, அடு‌த்த உணவை நேர‌ம் தா‌ழ்‌த்‌தியே உ‌ண்ண வே‌ண்டு‌ம்.

பொதுவாக நா‌ம் சா‌ப்‌பி‌ட்ட உணவு 3 முத‌ல் 4 ம‌ணி நேர‌த்து‌க்கு‌ள் ‌ஜீரணமா‌கி‌வி‌ட வே‌ண்டு‌ம். அ‌ப்படி இரு‌ந்தா‌ல் ந‌ம் உட‌ல் ந‌‌ல்ல ‌நிலை‌யி‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்று அ‌ர்‌த்த‌ம்.

பரோ‌ட்டா போ‌ன்ற ‌சில கடினமான உணவுக‌ள் ‌ஜீரணமாக கால தாமத‌ம் ஆகலா‌ம். பரோ‌ட்டா போ‌ன்ற உணவுகளை உ‌ண்டா‌ல் அ‌‌திகமாக ‌நீ‌ர் அரு‌ந்த வே‌ண்டியது ‌ஜீரண‌த்‌தி‌ற்கு அவ‌சியமா‌கிறது.

இய‌ல்பாக நா‌ன்கரை ம‌ணி நேர‌ம் அ‌ல்லது 5 ம‌ணி நேர இடைவெ‌ளி‌க்கு‌ப் ‌பிறகே ‌மீ‌ண்டு‌ம் ப‌சி‌க்க‌‌த் தொட‌ங்‌கினா‌ல் உட‌லி‌ன் ‌‌‌ஜீரண உறு‌ப்புக‌ள் ந‌ல்ல ‌நிலை‌யி‌ல் செய‌ல்படு‌கிறது எனலா‌ம்.




இரவு உணவு‌க்கு‌ம், காலை உணவு‌க்குமான இடைவெ‌ளியானது ச‌ற்று ‌வி‌த்‌‌தியாச‌ப்படு‌ம். இரவு உண‌வு உ‌ண்ட ‌பிறகு வெகு நேர‌ம் க‌ழி‌த்த அடு‌த்த உணவை உ‌ண்பதா‌ல், காலை உணவு ச‌ற்று எ‌ளிய உணவாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது. காலை‌யிலேயே, அசைவ உணவுகளை ஒரு ‌பிடி ‌பிடி‌த்தா‌ல், வ‌யி‌ற்‌றி‌ன் ‌செ‌ரிமாண‌த் ‌‌திற‌ன் வெகுவாக பா‌தி‌க்கு‌ம்.

ஒ‌வ்வொருவரு‌ம் அவ‌ரவ‌ர் வா‌ழ்‌விய‌ல் முறைகளு‌க்கு ஏ‌ற்றபடி உணவு உ‌ண்ண வே‌ண்டு‌ம். கடினமான வேலைகளை செ‌ய்பவ‌ர்க‌ள் உழை‌ப்பு‌க்கு‌த் தேவையான ச‌க்‌தியை அ‌ளி‌க்கு‌ம் ‌வித‌த்‌தி‌ல் உணவை உ‌ண்ணலா‌ம். ஆனா‌ல் அவ‌ர்களு‌க்கு உட‌லி‌ல் கொழு‌ப்பு சேராது. ஆனா‌ல் ஒரே இடத‌்‌தி‌ல் அம‌ர்‌ந்தபடி இரு‌ப்பவ‌ர்க‌ள் உணவை க‌ட்டு‌ப்பாடாகவே உ‌ண்ண வே‌ண்டு‌ம்.

வார‌த்‌தி‌ல் அ‌ல்லது மாத‌த்‌திலாவது ஒரு நா‌ள் உணவு ஏது‌ம் சா‌ப்‌பிடாம‌ல் இரு‌‌ப்பது, வெறு‌ம் பழ‌ச்சாறு, பழ‌ங்க‌ள் ம‌ட்டு‌ம் சா‌ப்‌பிடுவது வ‌யி‌ற்று‌க்கு ந‌ல்ல ஓ‌ய்வை அ‌ளி‌க்கு‌ம்.

காலை‌யி‌ல் எழு‌ந்தது‌ம் ப‌ல் துல‌க்‌கிய‌ப் ‌பிறகு வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்துவது, வ‌யி‌ற்றை சு‌த்த‌ப்படு‌த்த உதவு‌ம்.

சா‌ப்‌பி‌ட்ட ‌பிறகு பழ‌ங்க‌ள், பழ‌ச்சாறு அரு‌ந்துவது ச‌ரியான முறைய‌ல்ல. உணவு உ‌ண்ண ஒரு ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு மு‌ன்பு பழ‌ங்க‌ள் சா‌ப்‌பிடுவதுதா‌ன் ‌ச‌ரியான ‌ஜீரண முறை‌க்கு உதவு‌ம்.

வ‌யிறு மு‌ட்ட சா‌ப்‌பிடு‌ம் பழ‌க்க‌ம் இரு‌ந்தா‌ல் உடனடியாக அதனை ‌நிறு‌த்‌தி‌விடு‌ங்க‌ள். வ‌யிறு மு‌ட்ட சா‌ப்‌பிட‌்டு‌‌வி‌ட்டு ‌ஜீரணமாக‌வி‌ல்லையே எ‌ன்று க‌ஷ‌்ட‌ப்படுவதை‌விட, ‌‌ஜீரணமாக‌க் கூடிய அள‌வி‌ற்கு ம‌ட்டு‌ம் உ‌ண்பதுதா‌ன் ‌ந‌ல்லது. ‌

நீ‌ங்க‌ள் உ‌ங்க‌ள் வாயை‌க் கொ‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், வா‌ய் முழுவது‌ம் ‌நீரை ‌நிர‌ப்‌பி ‌வி‌ட்டு கொ‌ப்ப‌ளி‌க்க முய‌ற்‌சி செ‌ய்து பாரு‌ங்க‌ள். அசை‌க்க‌க் கூட முடியாது. ‌சி‌றிது ‌நீரை வெ‌ளியே‌ற்‌றி‌வி‌ட்டு கொ‌ப்ப‌ளி‌த்தா‌ல் எ‌ளிதாக கொ‌ப்ப‌ளி‌க்க முடியு‌ம். அ‌ப்படி‌த்தா‌ன் வ‌யிறு‌ம். வ‌யிறு முழு‌க்க உணவு இரு‌ந்தா‌ல், வ‌யிறு எ‌‌ப்படி உணவை ‌‌சீர‌ணி‌‌க்கு‌ம் ப‌ணியை செ‌ய்ய இயலு‌ம் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.




ஒருவரு‌க்கு ஒ‌வ்வாமையை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்று தெ‌ரி‌ந்தா‌ல், அ‌ந்த உணவை மு‌ற்‌றிலுமாக த‌வி‌ர்‌த்து ‌விடுவது ந‌ல்லது. அ‌திகமான மரு‌ந்துகளை எடு‌த்து‌க் கொ‌ள்வது‌ம் உட‌ல்‌நிலையை பா‌தி‌க்கு‌ம். எனவே மரு‌த்துவ‌ரி‌ன் ப‌ரி‌ந்துரை இ‌ன்‌றி எ‌ந்த மரு‌ந்துகளையு‌ம் சா‌ப்‌பிடுவதை பழ‌க்கமா‌க்‌கி‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம்.

ப‌சி‌த்த ‌பி‌ன், பா‌தியளவு சா‌ப்பா‌‌ட்டை சா‌ப்‌பி‌ட்டு த‌ண்‌ணீ‌ர் அ‌திகமாக குடி‌த்து ‌ஜீரண‌த்‌தி‌ற்கு நாம‌் உத‌வி செ‌ய்ய வே‌ண்டியது நமது கடமையா‌கிறது.


மூ‌ட்டு வ‌லி‌க்கான ‌சி‌கி‌ச்சை முறைக‌ள்
இர‌ண்டு எலு‌ம்புக‌ள் ச‌‌ந்‌தி‌க்கு‌ம் இட‌ம்தா‌ன் மூ‌ட்டு என‌ப்படு‌கிறது. ‌மூ‌ட்டுக‌ள் எலு‌ம்புகளை இணை‌த்து‌ப் ‌பிடி‌த்து, உறு‌தியான எலு‌ம்பு‌க்கூடு நகர உதவு‌கிறது.

சிலரு‌க்கு மூ‌ட்டுக‌ளி‌ன் இடையே உ‌ள்ள ஆ‌ர்டிகுல‌ர் கா‌ர்டிலே‌ஜ் எ‌ன்ற மெ‌ன்மையான பர‌ப்புக‌ள் ‌சீர‌ற்றதாவதா‌ல், மூட‌்டுக‌ள் எ‌ளிதாக இய‌ங்குவதை‌ப் பா‌தி‌‌க்‌கி‌ன்றன. இதனா‌ல் மூ‌ட்டுக‌ளி‌ன் மெ‌ன்மையான பலட‌ங்க‌ள் அதாவது மூ‌ட்டு ஜ‌‌வ்வுக‌‌ள் சேதமடை‌ந்து, மூ‌‌ட்டி‌ன் இய‌ல்பான இய‌க்க‌ம் செயல‌ற்று, அத‌ன் ‌விளைவாக மூ‌ட்டுக‌ளி‌ல் வ‌லி, ‌பிடி‌ப்பு, ‌சிதைவுக‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன.

மூட்டுகளின் வகைகள்

மனித உடலில் பலவகையான மூட்டுகள் உள்ளன.

அதாவது பந்து கிண்ண மூட்டு, இடுப்பு மற்றும் தோள் பட்டைகளில் உள்ளவை இந்த வகையாகும்.

முழங்கை, முழங்கால் முட்டிகள் மற்றும் விரல்களில் உள்ளவை மடங்கும் மூட்டுகள்.

கழுத்தின் முதல் இரண்டு எலும்புகளில் காணப்படுபவை மைய மூட்டுகள் ஆகும்.

நழுவும் மூட்டு வகையைச் சேர்ந்த¨ தான் கணுக்கால், மணிக்கட்டுப் பகுதிகளில் உள்ளவை. சாடில் எனப்படும் மூட்டு கையின் பெருவிரலில் உள்ளது.

மூட்டுகளில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளில் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி, ஆர்த்ரைடிஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்தியாவில் 150 மில்லியன் மக்கள் மூட்டு வலியினால் அவதிப்படுகிறார்கள். பொதுவாக 22 வயது முதல் 45 வயதுள்ளவர்களை இந்த மூட்டு வலி பாதிக்கிறது. இந்த நோய் தாக்கியவர்களுக்கு மூட்டுகளில் வலி, பிடிப்பு, வீக்கம் போன்றைவ ஏற்படுகிறது.

இதனை ஆரம்ப நிலையிலேயே சரியாக இனம் கண்டு அதற்கான நவீன முறை சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் இயல்பான நிலைக்குத் திரும்ப முடியும்.

தற்போது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வரை மருத்துவம் வளர்ந்துள்ளது. எனவே, மூட்டு வலியை கவனிக்காமல் விட்டுவிட்டு, பிறகு நடக்கவோ, நிற்கவோ முடியாமல் போகும் நிலையை அடைய வேண்டாம்.                                 உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது ஒன்றே மூட்டுக்களை முடமாக்காமல் தடுக்கும் நடவடிக்கையாகும்.



சைவ‌மாக இரு‌ந்தா‌ல் அதிக நாள் உயிர் வாழலாம் 

செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று நடைபெ‌ற்ற உலக சைவ ‌தின‌த்‌தி‌ன் ‌‌நிறைவு ‌விழா‌‌வி‌ல், ‌சைவ உணவை சாப்பிட்டால், அதிக நாட்கள் உயிர் வாழலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

உலக சைவ காங்கிரஸ் என்ற அமைப்பு சார்பில் உலக சைவ தின விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, மாணவ-மாணவிகளுக்கு சைவ உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

உலக சைவ தினத்தின் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அரிஹந்த் நிறுவனங்களின் இயக்குனர் விரேந்திரமால் ஜெயின், கனரா வங்கி உதவி பொதுமேலாளர் ஆர்.கணேசன், உலக சைவ காங்கிரஸ் அமைப்பின் தேசிய தலைவர் தாராசந்த் துகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், சைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், அதனால் அதிக நாள் உயிர் வாழ முடியும் என்றும் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. மரு‌த்துவ‌ர் ஆர்.தனபால் எழுதிய `சைவ உணவுகளின் மகிமை' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சைவ உணவை சாப்பிட்டு 101 வயது வரை நலமுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் முதியவர் காளியப்பனுக்கு விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சைவ உண‌வை‌ப் ப‌ற்‌றி காளியப்பன் கூறுகை‌யி‌ல், என்னுடைய சொந்த ஊர் விருதுநகராகும். 1909-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான் பிறந்தேன். சுதந்திர போராட்ட காலத்தின் போது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்சின் இந்திய தேசிய ராணுவப்படையில் இணைந்து போராடினேன். அப்போது ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேஷியா, சீனா உள்பட பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். 1947-ம் ஆண்டு முதல் சுத்த சைவத்திற்கு மாறினேன். அதனால்தான் இவ்வளவு காலம் உயிரோடு இருக்க முடிகிறது.

நான் தற்போது என்னுடைய மனைவி கணபதி அம்மாளுடன் தஞ்சாவூர் தென்கீழ் அலங்கத்தில் வசித்து வருகிறேன். இன்று வரை எந்த நோயும் வந்ததில்லை. மரு‌த்துவ‌ரிட‌ம் சென்றதும் இல்லை. சைவ உணவை சாப்பிட்டு, ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தால் அனைவரும் 100 வயது வரை வாழ முடியும் எ‌ன்று கூறினார்.

மனநலம் குன்றிய குழந்தைகளை கருவில் கண்டறியும் சோதனை

மனநலம் குன்றிய குழந்தைகளை கருவிலேயே கண்டறியும் சோதனையை இலவசமாக செய்ய தமிழ்நாடு டவுன்ஸ் சிண்ட்ரோம் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் மரு‌த்து‌வ‌ர் ரேகா ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆண்களின் 23 குரோமோசோம்களும், பெண்ணின் 23 குரோமோசோம்களும் இணைந்து கரு உண்டாகுகிறது. இந்த 23 குரோமோசோம் ஜோடிகளில் 21-வது குரோமோசோம் ஜோடியில் ஏற்படும் குறைபாடு காரணமாக டவுன்ஸ் சிண்ட்ரோம் ஏற்படுகிறது. இ‌ந்தியாவில் பிறக்கும் 600 குழந்தைகளில் ஒரு குழந்தை டவுன்ஸ் சிண்ட்ரோம் எனப்படும் மனநலம் குன்றிய குழந்தையாக உள்ளது.

இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகள் மூளை வளர்ச்சி குறைபாடு, உடல் ஊனம், அதீத வளர்ச்சி போன்ற பல்வேறு வகையான குறைபாடுகளுடன் பிறக்கின்றன. இந்த குறைபாடுள்ள குழந்தைகளை குணப்படுத்த முடியாது. ஆனால் கர்ப்ப காலத்திலேயே பிறக்க போகும் குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் உள்ளதா என்பதை அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் கண்டறிய முடியும்.

இது கு‌றி‌த்து மெடிஸ்கேன் நிறுவனத்தின் இயக்குனர் மரு‌‌த்துவர் சுரேஷ் மரு‌த்துவ‌ர் சுஜாதா ஜெகதீசன் ஆகியோர் சென்னையில் நே‌ற்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், தங்களுக்கு பிறக்க போகும் குழந்தைகள் பற்றி பெற்றோர் எண்ணற்ற கனவுகளில் இருப்பார்கள். சாதாரண ஸ்கேன்கள் மூலம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை ஓரளவே தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, குரோமோசோம் மாற்றத்தால் உருவாகும் டவுன்ஸ் சிண்ட்ரோமை கண்டறிவதற்கு அதிநவீன கருவிகள் தேவைப்படுகின்றன.

முன்பெல்லாம், கரு உருவான 5 மாதங்களுக்கு பிறகுதான் குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறிய முடியும். ஆனால் தற்போது கரு உருவான 11 முதல் 13 வாரங்களுக்குள்ளாகவே குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றி அறியலாம். கரு உண்டான பெண்ணின் ரத்தமாதிரியை எடுத்தும், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலமும் இந்த சோதனை நடத்தப்படும்.

இந்த 2 சோதனைகளில் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு, குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளதா? என்பதை அறியலாம். இதில் திருப்தி ஏற்படாவிட்டால், அடுத்ததாக கருவின் நஞ்சுக்குழாயில் இருந்து திசுக்களை எடுத்து குரோமோசோம் பரிசோதனைக்கு உட்படுத்தி கண்டுபிடிக்க முடியும். இந்த சோதனைக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும் எ‌ன்று கூ‌றினா‌ர்க‌ள்.

அத‌ன்‌‌பி‌ன்‌ன‌ர் பே‌சிய தமிழ்நாடு டவுன்ஸ் சிண்ட்ரோம் அமைப்பின் தலைவர் மரு‌த்துவர் ரேகா ராமச்சந்திரன், டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளை பராமரிப்பதற்கு தனிப்பட்ட கவனம் தேவை. அந்த வகையான குழந்தையை பெற்றெடுத்த பிறகு கஷ்டப்படுவதை விட, கருவிலேயே தெரிந்து கொள்வது நல்லது. இந்த வகை குழந்தைகள் மிகவும் அன்பாக இருப்பார்கள். அவர்களுக்குள் திறமைகள் புதைந்து இருக்கிறது. பயிற்சி அளிப்பதன் மூலம் அவற்றை வெளியே கொண்டு வர முடியும்.

சென்னை அபிராமபுரம் 3-வது தெருவில் உள்ள தமிழ்நாடு டவுன்ஸ் சிண்ட்ரோம் அமைப்பை அணுகுபவர்களுக்கு இந்த சோதனையை இலவசமாக செய்து வருகிறோம். எங்கள் அமைப்பு மூலம் இதுவரை 30 பேர் சோதனை செய்துள்ளனர்.

தமிழக அரசும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளது. பொதுவாக, கருவுற்றிருக்கும் அனைத்து தாய்மார்களும் இந்த சோதனைகளை செய்து கொள்வது அவசியமாகும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம் எ‌ன்று ரேகா ராமச்சந்திரன் கூறினார்.

இந்த நவீன சோதனை மூலம் கருவில் இருக்கும் குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் இருப்பது உறுதி செய்யப்பட்ட 2 கர்ப்பிணிப் பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பித்தப்பை கற்களுக்கு தீர்வு என்ன

முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது, கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது.




இந்த பித்தப் பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும்.

நாம் உணவு உண்டதும், இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் குடலுக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.

அவ்வாறு பித்தப் பை சுருங்கி விரிவடையாமல் நின்று போவதால், பித்தப் பையில் சுரங்கும் ஜீரண நீர் தேங்கி கற்களாக மாறுகிறது.